போலி பல் டாக்டர்
அவர் : அந்த டாக்டர் ஒரு போலி டாக்டர்னு எப்படிச் சொல்றே?
இவர் : ‘இவ்விடம் சொத்தை பற்களுக்கு மருந்து தெளிக்கப்படும்’ னு போர்டு வைச்சிருக்காரே அதான்!
டாக்டரும் வெட்டியானும்
(ஆபரேஷன் தியேட்டரில்)
நோயாளி: என்ன டாக்டர், இந்த நேரத்துல உங்களுக்கு யாரு போன் பண்றது?
டாக்டர்: நம்ம ஊர் சுடுகாட்டு வெட்டியான்தான்!… இன்னும் ஆபரேஷனே ஆரம்பிக்கலே… முடிச்சாச்சா… முடிச்சாச்சான்னு அவசரப்படறான் பாருங்க!
(பேஷண்டும், நர்சும்)
“உங்க டாக்டர் ‘பிரிண்டிங்க் பிரஸ்’கூட வச்சிருக்காராமே…?”
“ஆமாம்! ஆபரேஷன்ல பேஷண்ட் செத்துப்போனா, இவரே இலவசமா ‘கண்ணீர் அஞ்சலி போஸ்டர்’, [...]

